Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 APR 1932
இறப்பு 12 AUG 2014
அமரர் விசாலாட்சி சுந்தரமூர்த்தி
வயது 82
அமரர் விசாலாட்சி சுந்தரமூர்த்தி 1932 - 2014 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:23/07/2024

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விசாலாட்சி சுந்தரமூர்த்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்- தாயே!

இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திசையில்லா படகாக
திகைக்குதம்மா உன் குடும்பம்!

துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எங்களுக்கு உனைப்போல் யார் உளர்?..!

ஓய்ந்துவிட்ட ஓவியமே!
கரைந்துவிட்ட காவியமே!
வளர முடியாத வளர்பிறையே!
வருவாயா? மறுபடியும் எம் தாயே!

நிலவை நேசித்தேன்!!
மறையும் வரை....
கனவை நேசித்தேன்!!
காலை வரை...
இரவை நேசித்தேன்!!
விடியும் வரை...
தாயே உன்னை நேசித்தேன்!!
என் உயிர் உள்ளவரை.....

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices