
யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி கந்தசாமி கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட விருத்தாசலம் தவமணிதேவி அவர்கள் 07-01-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வராசா, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஏகாம்பரம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விருத்தாசலம் ஐயா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரியும்,
கமலேஸ்வரி, காலஞ்சென்ற வள்ளிநாயகி மார்க்கண்டு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவகணேஸ்(பிரான்ஸ்), சிவரூபன்(சுவிஸ்), ஜெயந்தி(லண்டன்), மகாலட்சுமி(சுவிஸ்), யசோதா(இலங்கை), அச்சுதன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சிவசங்கர், வசந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரியா, மாலதி, சிவபாலன், ஸ்ரீமுருகானந்தம், விக்னானந்தம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவசக்தி, சிவசோதி, சிவமதி, அருட்செலவம்(குட்டி), கனகாம்பிகை, விமலாம்பிகை(ரதி), கமலாதேவி, காலஞ்சென்றவர்களான சந்திராம்பிகை, திருச்செல்வம் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
கிரேசியன், அபிஷேகன், தினுஷா, தனுஷா, சாதனா, சரிகன், சேயோன், யசஸ்வின், யதுசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொலிகண்டி ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.