யாழ். எழுதுமட்டுவாழ் சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், விசுவமடு உழவனூரை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி தங்கம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எமது குடும்ப குலவிளக்கு அணைந்த வேளையில் உடனிருந்து எமக்கு உதவியவர்களுக்கும், மரணச்செய்தி கேட்டு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களுக்கும், துயரில் கலந்து கொண்டோர்க்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரம் வெளியிட்டவர்களுக்கும், மலர்வளையம் சாத்தியோருக்கும், இறுதி கிரியைகளில் கலந்து கொண்டோருக்கும் எமது இதயம் பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 13-11-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் அதனைத்தொடர்ந்து 15-11-2025 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் சபிண்டீகரண வீட்டுக்கிருத்தியமும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் நடைபெறும். இந் நிகழ்வுகளில் தாங்களும் கலந்து கொண்டு மதியபோசன நிகழ்விலும் பங்குபெற வேண்டுமென்று அன்புடன் வேண்டுகின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 1068,
உழவனூர்,
தம்பிராசபுரம்