
யாழ். புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விநாசித்தம்பி சேதுநாயகம் அவர்கள் 01-12-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்,
அன்னார், காலஞ்சென்ற விநாசித்தம்பி, மங்கையற்கரசி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், சின்னையா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
லோகேஸ்வரி, காலஞ்சென்ற கணேசராசா, அருந்தவராசா, காலஞ்சென்ற இரவீந்திரராசா, காந்தராசா, செல்வராசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற செல்வநாயகி, வல்லிபுரம், ஜெயராசா, சந்திரநாயகம், நவமணிதேவி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசலட்சுமி, தவமணி, தனலட்சுமி, காலஞ்சென்ற சண்முகநாதன், பரமகுரு, துவாராகாதேவி, பரமதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவகுமாரன், செல்வநிதி, ஞானேஸ்வரி(ராணி), தெய்வேந்திரன், இராசேந்திரன், சறோஜினி, கணேந்திரன், சசிரேகா, துவாரகா அவர்களின் அன்பு மாமனாரும்,
முரளி, சதீஸ், சியாமளா, சுபாங்கினி, பிரவீனா, பிரதீபா அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
நிசாந், பிரியங்கா, நிருசாந், நிரோஜினி, விநோத், சரணியா, துளசி, மயூரன், ஷாண், சஞ்சீவ் ஆகியோரின் பாசமிகுப் பேரனும்,
வினுஷன், கவிஷா ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இழப்பையெட்டி ஆறுதல் வார்த்தைகளை பகிர்ந்த அன்பு உள்ளங்களுக்கும், தேவை அறிந்து பசி போக்க உதவிய நேசங்களுக்கும், ஈமைக்கிரிகை உட்பட தொடர்ந்து இடம்பெற்ற ஆச்சாரங்களை செவ்வனே நிறைவு செய்ய உதவிய நித்திய உறவுகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
உங்களை நாம் இழந்த துயரை
ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!
எமது குடும்பத்தின்
பாசத்தலைவனாய்
திகழ்ந்த
எங்கள் அன்புத் தெய்வமே
எங்களின் வழிகாட்டியாய் வாழ்ந்து
அன்பையும் அரவணைப்பையும் தந்து
எங்களைத் தவிக்கவிட்டு
அமைதியாய்
விண்ணுலகு சென்றீர்களே...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தொடர்புகளுக்கு
- Contact Request Details
A wonderful person who is unforgettable. His Commanding voice and passive approach towards all, is unique. Thevarams when sung by him, were touching and brought peace to our minds. His service to...