1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
17
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த விமலநாயகி கருணாகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எந்தன் இன்னுயிர்த் துணைவியே!!
மலை போல் துயர்வரினும்
மயங்கா உறுதி தந்தவளே!
சிலை போல் நான் இப்போ
சித்தமின்றித் தவிக்கின்றேன்!
அலை போல் உன் நினைவு
அசைந்தசைந்து வருவதென்ன?
ஆருயிர் அம்மாவே.......!
பார்க்கும் பொருளெல்லாம் உங்கள் முகம்!
போகுமிடமெல்லாம் உங்கள் நினைவு!
கேட்கும் குரலெல்லாம் உங்கள் குரல்!
வருடங்கள் எத்தனை சென்றாலும்
மாறுமோ இன் நிலமை..?..!!
ஓராண்டு எமைப்பிரிந்து சென்றாலும்
ஒரு பொழுதும் எம் மனது
ஏற்றதில்லை உம் பிரிவை
பேச்சினிலே நீங்கள்!- சுவாசிக்கும்
மூச்சினிலும் நீங்கள்!
எதிலுமே நீங்கள்! எல்லாமே நீங்கள்!!!!!
எம் தெய்வமே! உங்கள் ஆத்மா சாந்தி பெற
ஆண்டவனை வேண்டுகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Very sorry to hear the sad news. Our deepest condolences to Karuna and family. She will be missed. May Her Soul Rest In Peace.