10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் விமலாம்பிகை சோதிலிங்கம்
வயது 58

அமரர் விமலாம்பிகை சோதிலிங்கம்
1954 -
2013
உரும்பிராய் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 03-09-2023
யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கு, கொழும்பு, கனடா Richmond Hill ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விமலாம்பிகை சோதிலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பத்து கடந்தன
காலன் உங்களை எம்மிடமிருந்து
பிரித்து சென்று,
அதன் வலியும்
வேதனையும் இன்னமும் எங்கள்
மனங்களில் ஆறாத காயங்கள் தாயே
உங்களின் அழகான வதனம் அதில்
என்றென்றும் மாறாத புன்னகை,
உங்களுடன் வாழ்ந்த அந்த இனிமையான
வாழ்க்கை அவற்றையெல்லாம் எப்படி
அம்மா மறக்கமுடியும்
இந்த பத்து ஆண்டுகளில் உங்கள்
நாமம் உச்சரிக்காமல் எங்கள்
வாழ்க்கையில் எந்தவொரு நாளும்
கடந்து போனதில்லை அந்த நினைவுகளே
நித்தமும் எமது கவலைகளுக்கும்
மருந்தாகி போனது
இன்று நீங்கள் எம்முடன் இல்லையென்றாலும்
உங்களின் ஆத்மார்த்தமான வழிகாட்டல்
எம்மிடையே தொடரும் தாயே!!!
தகவல்:
குடும்பத்தினர்
Deepest condolences to Sothilingam and children. Years have passed but memories cannot be erased. Aruluthayan-Vanaja & family