

யாழ். வண்ணார்பண்ணை லோட்டஸ் றோட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரி வாசேஸ்பதிராஜா அவர்கள் 25-04-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வாசேஸ்பதிராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
தனேஸ்வரி(ஆசிரியர்- ராசிக்பரீட் முஸ்லிம் மகளிர் கல்லூரி, கொழும்பு), கணேஸ்வரன்(உப பீடாதிபதி- தர்கா நகர் தேசிய கல்வியற் கல்லூரி), லோகேஸ்வரி(ஆசிரியர்- வண்ணை வைத்திலிங்கம் வித்தியாலயம்), லோகேஸ்வரன்(ஆசிரியர்- சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம்), ஜெகதீஸ்வரன், கமலேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நேசகுமாரன், வளர்மதி, மகேந்திரன், சதாங்கினி(முகாமைத்துவ உதவியாளர் கரைச்சி பிரதேசசபை), அபிராமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஸ்ரீஹரிஸ், சபரீசன், தருணன், தருண்ஜா, தஷாயினி, ஆருக்ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2019 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
my deepest condolence.