யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், சூராவத்தை, சுண்டுக்குளி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினராசா சச்சிதானந்தன் அவர்கள் 06-05-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விக்கினராசா மங்களம் தம்பதிகளின் ஏகபித்திரரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சவுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலைமகள்(ஓய்வு நிலை ஆசிரியை- யாழ்/ஸ்கந்தவரோதயாக்கல்லூரி, யாழ்/கொழும்புத்துறை துரையப்பா வித்தியாலயா) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. மயூரதி(தேசிய வைத்தியசாலை- கொழும்பு), அரிகரன்(இலங்கை கணக்காளர் சேவை) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
சயந்தன்(பொறியியலாளர்- Global Digital(Pvt) Ltd) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சபாநாதன்(நீர்கொழும்பு), தில்லையம்பலம்(கொழும்பு), கனகாம்பிகை(கனடா), காலஞ்சென்ற சரோஜினி தேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வேலணைச் சேர்ந்த கனகநாயகம் பானுமதி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
சுந்தரலட்சுமி, கமலாதேவி(நீர்கொழும்பு), கனகசபாபதி(கனடா), நடராஜா, காலஞ்சென்றவர்களான கணேசன், மகேசன், கருணாகரன், சிவகுமாரன் மற்றும் பரமேசன்(கனடா), பூவதி(ஜேர்மனி), கமலாம்பிகை(ஜேர்மனி), வதனி(பங்கையற்செல்வி), வனிதா, வசந்தினி, கலைச்செல்வன், வனஜா, வசந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானை நடராஜா(சுருவில்), சீதையம்மா சதாசிவம்(சுண்டுக்குளி), பொன்னம்மா கந்தையா(மானிப்பாய்), மாணிக்கம் சுப்பையா(சுருவில்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற வீரசிங்கம், தங்கரத்தினம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
வெண்பா அவர்களின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2019 புதன்கிழமை மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
யா/அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயம்- ஆசிரியர், 01-09-1971
இ/பலாங்கொடை ஜெயவாணி ம.வி- ஆசிரியர், 01-01-1974
இ/பரிலூக்கா ம.வி- ஆசிரியர், 01-02-1974
கொ/கொம்பனித்தெரு றோ.க.த.க.வி- ஆசிரியர், 01-01-1976
கொ/பம்பலப்பிடி இந்துக் கல்லூரி- ஆசிரியர், 01-04-1979
யா/யூனியன் கல்லூரி- ஆசிரியர், 01-01-1982
யா/யூனியன் கல்லூரி- ஆசிரிய ஆலோசகர், 01-09-1985
யா/வறுத்தலைவிளான் அ.மி.த.க.வி- தரம் III அதிபர், 01-01-1991
யா/அளவெட்டி அருணாசலம் வித்தியாலயம்- தரம் II அதிபர், 01-02-1991
யா/மல்லாகம் மகா வித்தியாலயம்- தரம் IC அதிபர், 05-11-1993
தி/விவேகானந்தா கல்லூரி- தரம் IAB தற்காலிக இணைப்பு, 05-01-1998
யா/மல்லாகம் மகா வித்தியாலயம்- தரம் IC அதிபர், 01-01-1999
யா/நடேஸ்வராக் கல்லூரி- தரம் IAB அதிபர், 07-04-2000
யா/இணுவில் இந்துக்கல்லூரி- தரம் IC அதிபர், 05-09-2003
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.