யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், இலங்கை, இந்தியா, எதியோப்பியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ மண்ணுலகு விட்டு விண்ணுலகு விரைந்து
ஆண்டு ஆயிரமே ஆனாலும்
ஆறுமா எம்துயரம் மாறுமா எம் கவலை!
கொடையாகத்தந்த ஆசானே
எமது வாழ்க்கையின் வெற்றிக்கு உதவிடுவீர்கள்
தட்டிக் கொடுப்பீர்கள் அன்புக்காட்டி
ஆதரவாய் இருப்பீர்கள் என்றிருந்தோம்
ஆனால் அகிலத்தில் இல்லை இனி எமக்கு
ஆசானின் அரவணைப்பு!
காலங்கள் போகலாம் கனவுகளும் தொடரலாம்
காத்திருப்புகள் இனி நிரந்தரமில்லை
அதில் நிம்மதியும் இல்லை!
நிஜமாக வாழ்ந்த வாழ்க்கை இன்று
காணல் நீராய் போனதென்ன
மண்ணுலகை விட்டுச் சென்றாலும்
விண்ணுலகில் பேரின்ப பெரு வாழ்வு வாழ!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
பிராத்தி்க்கும் உங்கள் அன்பு மாணவன் நேசநாயகம்
ஓம் சாந்தி....... ஓம் சாந்தி .....ஓம் சாந்தி
While we are mourning the loss of (John ), others are rejoicing to meet him behind the veil