10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் விஜயரட்ணம் ஞானறஞ்சிதம்
1956 -
2015
திருநெல்வேலி, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயரட்ணம் ஞானறஞ்சிதம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பும் பண்பும் அரவணைப்பும்
நிறைந்த எங்கள் அன்பு அம்மா
பத்து ஆண்டுகள் ஓடிவிட்டதம்மா
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண!
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரம்மா?
காணவில்லையே எம் கடவுளை
எங்கள் தெய்வம் நீதானே அம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்