

அமரர் விஜயன் சிதம்பரப்பிள்ளை
1953 -
2020
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அயல் தந்த முத்து !கொடிய நோயின் கோரப்பிடியில் சிக்கி உயிர் நீந்த உத்தம ராசா !உன்னை இழந்து தவிக்கிறோம் நித்தமும் !அன்பும் பண்பும் பரிவும் நிறைந்த எங்க ராசா !"ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளருவான் "என்று எங்கள் எல்லோரையும் ஊட்டி வளர்த்த அன்பு தாயின் அன்பு மகன் !இழந்த செய்தி கேட்டு இடிந்து போனோம்.. பசி என்று வருவோர் எல்லாம் வாயிராறும் இடம் உன் இல்லம் !தேசம் விட்டு தூர தேசம் சென்றாலும் பாசம் வைத்து நேசம் வளர்ந்து எல்லோர் இதயங்களிளும் வாழும் உள்ளம் !இன்று உன்னை இழந்து தவிக்கிறோம் ஐயா !எம் வீதி உலா வந்த மகன் பாதியில் விதி முடிவில் விண்ணுலகு போவதேன்? எங்கிருந்தாலும் நலமோடு வாழ்வாய் என்னிருந்தோம் கொடிய நோய் கொண்டு போனதேன் !தவியாய் தவிக்கிறோம் திரும்ப வந்துடும் ஐயா !!உன் உடன் பிறப்புகள் எல்லாம் அருகில் இருந்தும் அண்ணாவின் முகம் காணாமல் திக்கு திக்காய் நின்று திணறுகின்றனர் ஆறுதலுக்கு அருகில் இல்லா வேதனையில் வெந்து வாடுகின்றனர் !கோழி தன் குஞ்சுகளை அடை காப்பது போல் காத்து வளர்த்த மகன் இறுதி விடை கொடுக்காது இறுதியில் தன்னம் தனியே போவதுமேன் !பூநகரி புழுங்கல் அரிசியும் ஊர்கோழி முட் டையும் நல்லெண்ணெய்யில் வதங்கி நாருசிக்க ஊட்டி வளர்த்த மகன் நாவரண்டு போவதுமேன் !அருகில் அதிக காலம் நாம் கண்ட காட்சிகள் எல்லாம் இன்று கனவாக போனதே !!தீராது துன்பம் சொல்லி மாளாது ஆறாது உன்னை இழந்த துன்பம் என்றும் ஆறாது மீளாது என்றும் மீளாது !!அழுது துடிக்கிறோம் சோகத்தில் விம்மி வெடிக்கிறோம் !!இயற்கையின் நியதியின் இறப்பும் உண்டு என்று இப்பொது அமைதியாய் உறங்குங்கள் உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்குகின்றோம்...
சாந்தி !சாந்தி !சாந்தி
தம்பிலேன்
உன் பிரிவால் வாடும்
அயலவர்கள், நண்பர்கள்
Write Tribute