அமரர் விஜயன் சிதம்பரப்பிள்ளை
1953 -
2020
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நம் இதயத்தில் சோகத்தின் கீதத்தை இசைத்த சின்னவனே!
எங்களைத் தவிக்கவிட்டு அவசரமாய் எங்கே சென்றாய்?
நம் உள்ளத்தில் வேதனையின் கோலத்தை வரைந்த சின்னராசா
இந்த வயதில் மண்ணைவிட்டு ஏன் தான் போனாய்?
இனிமையாகப் பேசி எப்போதும் எங்களை மதித்த நல்லவனே!
அறுபது ஆண்டுகள் உயிராய்ப் பழகிவிட்டு கண்களில் குருதி வடிக்கச் சொல்கிறாய்!
ஏழு வயதிலே மகாபாரதம், இராமாயனம் படித்த வல்லவனே அதனால் தானோ
நாம் வாடுவது தெரியாமல், கொடூர மரணத்தின் மடியில் மெளனமாகவே
புன் நகைத்து இருக்கிறாய்!
இக்கட்டான தாய் நாட்டு அரசியல் சூழலில், நம் தந்தை உயிர்காக்க
மெய்க்காவலனாய் முன்னும் பின்னும் திரிந்த அன்புத் தம்பி விஜயனே!
உன்னைப் பாதுகாக்க ஏன் தான் மறந்தாய்
எங்களைவிட்டு ஏன் தான் உயிர்துறந்தாய்?
உன் பிரிவால் வாடும் உடன் பிறவாச் சகோதர சகோதரிகள்
மறைந்த Advocate Arumugam அவர்களின் புத்திர புத்திரிகள் குடும்பம்
Write Tribute