எங்கள் கண்ணீர் அஞ்சலியை உங்கள் பாதங்களில் காணிக்கை செய்கிறோம் ! எங்க வீட்டு எதிர் வீட்டு சொந்தகாரன் எங்களின் பாசக்காரன் எங்கள் சின்ராசா ! இழந்த செய்தி கேட்டு இடிந்து போனோம்...எதுவும் புரியாமல் குழம்பி போனோம் !கொடிய நுண்ணுயிர் உன்னுயிர் எடுத்தது ஏனோ?சொல்லு ராசா.. விஞ்ஞானம் தோற்று போனதால் எங்க ராசா விண்ணுலகம் போனாயோ? மாந்தோப்பும் மல்லிகை நறுமணமும் வயிரவர் வீதியின் புளியமரத்தடி மாளிகையில் வாழ்த்த மகன் எங்க சின்ராசு... எங்களை விட்டு மண்ணுலகம் சென்றாயோ சொல்லு ராசா !!"கண்ணை இமை காப்பது போல் "காத்த மகராசின் இளைய மகன் எங்க சின்ராசு... உச்சி முதல் பாதம் வரை எண்ணெயில் குளிப்பாட்டி தாலாட்டி, சீராட்டி, பாராட்டி வளர்த்த மகன் எங்க சின்ராசு எங்களை தவிக்க விட்டு எங்கு போனாய் சொல்லு ராசு !!பாழாய் போன நோய் வந்து உன்னை வீணாய் கொண்டு போனதே !!எமக்கு ஏதும் என்றால் ஓடி வந்து உதவிடுவாய் அன்பும் பாசமும் நிறைந்தவன் எங்க சின்ராசு !!உன்னை இழந்து தவிக்கின்றோம்... காலம் செய்த கோலம் ஐயா உன் உடன் பிறப்புகள் ஓடி வர முடியா காலம் ராசா !எட்டு திசையிலும் ஓலமையா !தோப்பாய் இருந்த மகன் தவமாய் தவம் இருந்து பெற்ற மகன் தனி மரமாய் போவதுமேன்? வேதனையில் வாடுகின்றோம் கதறி அழுகின்றோம் அழுது புரள்கின்றோம்... உன் பெற்றோரிடம் சென்று விட்டாய் எங்க சின்ராசு அமைதியாய் உறங்கு எங்க சின்ராசு !!உன் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம் எங்க சின்ராசு !! சாந்தி !சாந்தி !சாந்தி அண்ணாவின் பிரிவால் தவிக்கும் அன்பு சகோதர சகோதரிகளுக்கு ஆழ்த்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.. காந்தி அம்மாவின் ஒரு உள்ளதை இழந்த விட் டோம் என்ற வேதனையுடன்... சின்னத்தம்பி குடுப்பம் B. A தப்பிலேன்..