Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 23 DEC 1931
மறைவு 13 MAY 2019
அமரர் விஜயலட்சுமி நாகரத்தினம் (Vijayam Teacher)
இளைப்பாறிய உப அதிபர் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆரம்ப பாடசாலை, முன்னால் ஆசிரியை கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாலயம், கொழும்பு விவேகானந்தா கல்லூரி
வயது 87
அமரர் விஜயலட்சுமி நாகரத்தினம் 1931 - 2019 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Greenford ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த  விஜயலட்சுமி நாகரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!

பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!

சிரித்த முகம் மாறாத
சிறுபிள்ளை போன்ற உள்ளம்
உற்றார் உறவினரை - வரவேற்று
உபசரிக்கும் உயர்ந்த குணம்
வாடி நிற்கும் மனிதருக்கும்
சேவை பல செய்தாயம்மா!

அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 22 May, 2019