Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 26 SEP 1948
விண்ணில் 19 APR 2016
அமரர் விஜயலட்சுமி சண்முகலிங்கம் (ராணி)
வயது 67
அமரர் விஜயலட்சுமி சண்முகலிங்கம் 1948 - 2016 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் ஆலடிச்சந்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயலட்சுமி சண்முகலிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

நான்கு ஆண்டுகள் மட்டும் அல்ல
எத்தனை ஆண்டுகள் போனாலும்
மீண்டும் மீண்டும் அம்மா அம்மா என்றே
மனம் தேடுகின்றதம்மா

உன் ஞாபகத்தில் என்றும் நாம்
வெதும்பி வெதும்பி அழுகின்றோம்
வேதனையில் தவிக்கின்றோம்
எம் குடும்பத்தின் ஒளிவிளக்காய்
ஒளிர்ந்தவளே!

உன் ஒளிமுகத்தை முன்றிருத்தி
என்றும் உன்நினைவுடனே
வாழுகின்றோம்.

நினைவில் எம்முடனும் நிஜத்தில்
இறைவனிடமும் கலந்திட்ட உன் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

இன்றுவரை இனியாரும் இல்லை
அம்மா! எமக்கு இப் புவியில்
உங்களை இழந்த துயர் நீக்க!!!

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
ஆண்டவன் மறப்பதுண்டோ
நம் ஆறுயீர் இருக்கும்வரை
தாயே உம்மை நினைக்காமல்
இருப்பதுண்டோ!!

உங்கள் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!

தகவல்: பிள்ளைகள்