

யாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், இளவாலை காடிவளையை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் விஜயலட்சுமி அவர்கள் 27-11-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், சோதிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
குலதாசன், பிரபாசினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் துரைசிங்கம், தம்பிப்பிள்ளை அருமைப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜெயதீபன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை மகாதேவன், காலஞ்சென்ற கமலாம்பிகை சுப்பிரமணியம், காலஞ்சென்ற சிவபாக்கியம் துரைசிங்கம், காலஞ்சென்ற செல்வபாக்கியம் இரங்கநாதன், சரஸ்வதி ஆறுமுகம், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை குணசிங்கம், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை தர்மராஜசிங்கம், வேலுப்பிள்ளை நவரட்ணசிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
தேவராஜன் துரைசிங்கம்(நோர்வே), ரவீந்திரன் துரைசிங்கம்(லண்டன்), நளினி அமுதலிங்கம்(ஜேர்மனி), யாழினி விஜியகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
கமலாதேவி தர்மராஜசிங்கம்(லண்டன்), தவமலர் சுந்தரலிங்கம், கோமதி வேலாயுதம்(சுவிஸ்), பானுமதி ரவீந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு சின்னமாவும்,
அரிஸ், அபினா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-11-2020 சனிக்கிழமை அன்று காடிவளை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 29-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் சேந்தான் குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.