
யாழ். சரவணை பள்ளம்புலத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு ஆடியபாதம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி ஆனந்தசோதி அவர்கள் 10-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பாலலோசனி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஆனந்தசோதி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான வாசுகி, வாகீசன் மற்றும் பிரகீசன், வானுஜி, கஜனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கமலபூரணம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
சிவகஜன் அவர்களின் அன்பு மாமியாரும்,
ஸ்ரீவர்மன் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
நாகேஸ்வரி காலஞ்சென்ற பரம்சோதி மற்றும் இராஜேஸ்வரி, சிவசோதி, காலஞ்சென்ற அருட்சோதி மற்றும் ஞானபண்டிதசோதி, ஈஸ்வரகௌரி, சிவகாமஈஸ்வரி, திருவருட்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அன்னாரின் இறுதிக்கிரியை 13-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சரவணை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.