யாழ்ப்பாணம் மணிக்கட்டு வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகுமார் முத்துகிருஸ்ணா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பின் திருவுருவாய் அகத்தின் ஒளிவிளக்கே -அப்பா!
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
நாட்கள் 31 ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ! அப்பா
எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!
எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-அப்பா
மாறாது ஒருபோதும் உம் கொள்கை நம் வாழ்வில்
என்றும் மறையாது உங்கள் நினைவு
எம் மனதை விட்டு அப்பா!!!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மதியபோசன நிகழ்வு 26-08-2023 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை 457 Spring Garden St, Dollard-Des Ormeaux, QC H9B 1T2 எனும் முகவரியில் நடைபெறும்.
Sorry to hear this sad news Sitthapa family . Our deepest condolences, May his soul rest in peace….