1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் விக்கினேஸ்வரி இராமசந்திரன்
வயது 83

அமரர் விக்கினேஸ்வரி இராமசந்திரன்
1936 -
2019
உரும்பிராய், Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Morden, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த விக்கினேஸ்வரி இராமசந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமிகு நிழல் பரப்பி
எங்கள் ஏற்றமிகு வாழ்விற்கு
மெழுகுவர்த்தியாய் தனையுருக்கி
ஒளி பரப்பிய எங்கள் தாயே!
ஓராண்டு போனதே
காணவில்லையே எம் கடவுளை
எங்கள் தெய்வம் நீதானே அம்மா
கனவிலே வந்து கதைகள் பல சொல்கிறீரே
நேரில் வந்து சொல்லீரோ
காவியமாய் வாழ்ந்தீர்கள்
உம்மை காலமெல்லாம்
நினைத்திருப்போம்
பாசத்தோடும் பண்போடும் எமை
பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும் எம் சந்ததிக்கு
ஒளி விளக்காய் ஒளி தந்து
வழி நடத்துங்கள் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace maamy