கனத்துப்போகிறது... கனத்துப்போகிறது தாயே உன் மௌனம்... விழி சொரியும் நீருக்குள் நீண்டு கிடக்கும் உன் நினைவுகளை மீட்டுத்துடிக்கும் மனம் மறக்க மறுக்கிறது... கெஞ்சியழைத்து எம்மை கொஞ்சி மகிழ்ந்திடும் உன் தாய்மை பெற்ற தாய் இல்லா வலிக்கு மருந்தாகும்... தேடித் தவிப்பாய் கூவி அழைப்பாய் கூடி மகிழ்வாய்... வாடிக்கிடந்தாய்... என சேதி வருமுன்னே தாயே எங்கே ஓடி மறைந்தாய்...? கெஞ்சி அழைத்து எம் மழலைகளை நீ கொஞ்சி மகிழ்ந்திடும் அழகு இனி எங்கு கிடைத்திடும் சொல்... எப்படிதான் உன் மனதிருந்தாலும் அத்தனையும் மறைக்கும் உன் புன்னகைக்கு இனி எங்கு போவோம்...? காலன் அவன் காலம் மிகக் கொடியது மாமி... கன கச்சிதமாய் கவர்ந்து போகிறான் எமக்காய் எம்மை சுற்றியுள்ள அத்தனை உறவுகளையும் இறுதியாய் உன்னையும்... உன் மகளாய்... உன் தோழியாய்... உன் இரகசியமாய்... உன் எல்லாமாய் இருந்த... உன் செல்ல மருமகளை(டயாழினி) காத்திருக்க சொன்னாயே கார்த்திகைக்குள் வருவேன் என்று கடைசி மூச்சுவரை உன் மருமகளை நீயழைத்த காரணம் யாமறியோம்... தேற்றுவார் இன்றியே தேற்றி கொள்கிறோம் ஆற்றுபடுத்தி ஆற்றுபடுத்தியே களைத்துபோகிறது மனம்... ஈசன் அடிதாள் இறைஞ்சி வேண்டுகிறோம் உன் ஆத்ம சாந்திக்காய் அவன் அடி பணிகின்றோம்... ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி