உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், இருபாலை மற்றும் கட்டுவனை வதிவிடமாகவும், தற்போது டென்மார்க் Bramming ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விக்டர் நைட் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிரூட்டி வளர்த்தவரை
உயிர் உள்ளவரை மறவோம்!
அன்பைப் பொழிந்து அறிவைத் தந்து எம்மை இவ்வுலகில்
பெருமையோடு வாழ வைத்த எம் அன்புத் தந்தையே!
அணைக்கின்ற கைகளும்
அழகிய புன்னகையையும்
அன்பை சுமந்த இதயத்தையும்
ஆண்டவன் பறித்தது ஏன்….?
சுவாசிக்க சுவாசம் இல்லை நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன் நிஜங்களைத் தேடுகின்றோம்
நீங்கள் மறைந்து ஆண்டுகள் பத்து
ஆனால் என்ன? எம்மை விட்டு
நினைவுகள் என்றுமே
மறந்து விடப்போவதில்லை!
என்றும் உங்கள் நினைவில் திருமதி G. நைட் - மனைவி, பிரைட்டா நைட் - மகள், ஜோர்ஜ் நைட் - மகன், பாஸ்கரன் - மருமகன்.....