யாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு, மானிப்பாய் (மேதர் லேன்), லண்டன் (வெம்பிளி) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் விக்னேஷ்வரன்(ராசன்) அவர்கள் 31-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசநாயகம், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்.
சுகன்யா, தனுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரமேஷ், சுஜி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற வேலாயுதம் மற்றும் கனகம், செல்லம், காலஞ்சென்ற அன்னம், ஜெகநாதன் மற்றும் மகேஸ்வரி, சரோஜினிதேவி, விக்னேஸ்வரி, காசிநாதன், நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வநாயகி, செல்வநாயகம், கனகசபாபதி, விவேகானந்தன், மகாதேவன் மற்றும் நடராஜா, காலஞ்சென்ற காசிநாதன் மற்றும் பத்மலோஜினி, வனிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நாகபூசனி, மகேஷ்வரி மற்றும் பாக்கியம், காலஞ்சென்ற தையல்நாயகி, நவரட்ணம் மற்றும் தில்லைநாயகி, துரைராஜா, வாமதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்.
செரினா, டேமியன், எலைனா, மைலா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரங்கள் பின்னர் அறியதரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.