யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், மீசாலையை வதிவிடமாகவும், பிரான்ஸ் Noisiel ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரன் பரமானந்தி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
இன்றோடு 31 நாட்கள்ஆனதுவே
நீங்கள் இல்லை
நினைக்கையில் வியக்கின்றேன்
நிஜமாய் நான் வாழ்ந்தேனா?
நினைவுகள் வருகையிலே
நிலைகுலைந்து போகின்றோம்
காணும் காட்சிகளில்
கண்முன்னே நிற்கின்றீர்!
அன்பாய் அப்பா என்று
அழைத்திட யாருண்டு?
வேதனையை சொல்லிவிட
வார்த்தைகள் இல்லை
மீண்டும் நீ வாரும் அப்பா!
வாழ்ந்திட இவ்வுலகில் நீ
வரும் காலம் வரும் என எண்ணி
வாழ்கின்றோம்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அமரர் விக்கினேஸ்வரன் பரமானந்தி அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டிக்கிரியை 12-04-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு அவரது இல்லத்திலும், அதனைத் தொடர்ந்து 13-04-2024 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியிலிருந்து பி.ப 05:00 மணிவரை Église catholique Notre-Dame-du-Val, 33 Bd Thibaud de Champagne, 77600 Bussy-Saint-Georges, France என்னும் இடத்தில் நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்துகொண்டு அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tu étais une bonne personne, tu as toujours pris soin de moi. Je rigolais toujours avec toi et tu m'as toujours offert plein de choses. Mais tout ça, c'est fini maintenant. Je suis désolé si je...