
-
26 FEB 1929 - 06 JUN 2020 (91 வயது)
-
பிறந்த இடம் : வவுனியா, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : வவுனியா, Sri Lanka
வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வெற்றிவேலு ஜோசப் சண்முகம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!
அன்று எங்களது துன்பம் நீக்க
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலதெய்வமே!
கருணையின் வடிவமே பண்பின் சிகரமே
உனது அன்பாலும் அரவணைப்பாலும்
உனது நித்திய சிரிப்பாலும் அடுத்தவர்களிற்கு
கூறும் ஆறுதல் வார்த்தைகளாலும்
அனைவரையும் கவர்ந்தீரே!
உற்றார் உறவினர்களிற்கு நற்பண்பை காட்டியதுடன்
உங்களை நம்பி நடப்பவர்களிற்கெல்லாம்
எதையும் செய்யத் துணிந்த கருணைக்கடலே!
உயிருக்கும் மேலானவரே உம் நினைவோடு
நீர் மறைந்து போனபின்பும்
உம் நினைவு சுமந்த நெஞ்சமெல்லாம்
கண்ணீராய் கரைந்து பேராறாய்
பெருகுதய்யா மடைதிறந்து!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் துயரும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வவுனியா, Sri Lanka பிறந்த இடம்
-
வவுனியா, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )
