

யாழ். சாவகச்சேரி சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வெற்றிவேலு தர்மலிங்கம் அவர்கள் 04-03-2021 வியாழக்கிழமை அன்று சரசாலையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், பேரம்பலம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகரத்தினம்(சோதி) அவர்களின் அன்புக் கணவரும்,
மகேஸ்வரி, சிவபாதம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கலைவாணி(இலங்கை), பகீரதன்(சுவிஸ்), கிரிதரன்(நெதர்லாந்து), திவாகரன்(பிரித்தானியா), சுதாகரன்(பிரித்தானியா), கோகிலவாணி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசலிங்கம்(குஞ்சுராசா), மஞ்சுளாதேவி, அமிர்தகுமாரி, அஜந்தா, ராஜினி, பவான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வல்லிபுரம், சித்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அரவிந்- ரீகனா(சுவிஸ்), பிரதிகா- சுதாகரன்(இலங்கை), லக்சனா, கஜன், சுகாசன், ரம்சிகா, அனிஸ், விஷ்ணி, பிரஜீன், லுவிசன், ரொகாஸ், தனோஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சம்னா, சானுகா, திஸ்வி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-03-2021 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சரசாலை வடக்கு கொம்பிகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My deepest condolences to you and your family. Please know that our family is keeping you and yours in our prayers and thoughts.