Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 APR 1945
இறப்பு 30 JUL 2022
அமரர் வேதநாயகி விநாயகமூர்த்தி
வயது 77
அமரர் வேதநாயகி விநாயகமூர்த்தி 1945 - 2022 இணுவில், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்போதய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேதநாயகி விநாயகமூர்த்தி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 06-08-2024

ஆண்டுகள் இரண்டானதம்மா
ஆறாத உன் ஞாபகங்கள்
மீண்டும் மனதில் உருண்டோட
மீள முடியாது தவிக்கின்றோம்
மெளனமாய் அழுகின்றோம்

உன் அன்பான பேச்சும்
இரக்கம் கொண்ட உள்ளமும்
கனிவான எண்ணமும்
உன் போல துணையும்
யாருமில்லை இன்றுவரை

கணப்பொழுதில் கண்மூட
உன் இறுதி மூச்சு நின்றோட
நம்ப முடியவில்லை இன்னளவும்
நீ இல்லாத வாழ்க்கையை

காலங்கள் போகலாம்
காயங்கள் மாறலாம்
நெஞ்சில் உன் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு நீங்காது அம்மா…

உங்கள் நினைவுகளைக்
காலமெல்லாம் சுமந்து நிற்போம் பாசமிகு
பிள்ளைகள்...

தகவல்: குடும்பத்தினர்