

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St.Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட வீரகத்திப்பிள்ளை சர்வலோகநாதன் அவர்கள் 01-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை வேதவல்லி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகமணி பொன்னம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவகி அவர்களின் பாசமிகு கணவரும்,
திலகேஸ்வரி, சந்திரலேகா, நித்தியகலா, ஜோஜினி, தரங்கினி ஆகியோரின் அன்பு அப்பாவும்,
காலஞ்சென்ற ரெனிஸ், மகிந்தன்(சுதன்), சிவமேகன், அனந்தன், அரவிந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவலோகநாதன், வெற்றிவேல், தனலட்சுமி(மணி), மஞ்சுளாதேவி, மல்லிகாதேவி, சர்வானந்தன்(ரவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராமசந்திரன், தெய்வநாயகி, துரைராசா, குலசிங்கம், நாகேஸ்வரி, சௌந்தர்ராயன், திலகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரவி, கண்ணன், காலஞ்சென்ற சுபாஷ், பிரகாஷ், ரதிஷ், மிரா, ஜிந்து, தினேஷ் ஆகியோரின் அன்பு மாமாவும்,
மெலிஷன், அபிஷா, பிரவின், பிரதி, கபிரா, குளோரியா, அக்கினியா, அத்வினா, அர்ச்சுதன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.