Clicky

பிறப்பு 12 MAR 1973
இறப்பு 10 NOV 2018
அமரர் வேந்தன் ஆறுமுகசாமி
யூனியன் கல்லூரி பழைய மாணவர், பிரபல இசைக் கலைஞர், சித்திராலயா இசைக்குழு(UK)வின் ஆரம்பகால உறுப்பினர், பல்லவி இசைக்குழு(UK)வின் ஸ்தாபகர், தென்னிந்திய திரைப்பட நடிகர்.
வயது 45
அமரர் வேந்தன் ஆறுமுகசாமி 1973 - 2018 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 22 NOV 2018 Switzerland

பைபிள் துக்கத்தில் தவிக்கிறவர்களுக்கு அளவில்லாத ஆறுதலைத் தருகின்றன. இறந்தவர்கள் எந்த வேதனையும் அனுபவிப்பது இல்லை “இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது” என்று பிரசங்கி 9:5 சொல்கிறது. “அவர்களுடைய யோசனைகள் அழிந்துபோகின்றன.” (சங்கீதம் 146:4) அதனால்தான், மரணத்தை நிம்மதியான தூக்கத்தோடு பைபிள் ஒப்பிட்டுப் பேசுகிறது.—யோவான் 11:11. அன்பான கடவுளை முழுமையாக நம்புகிறவர்களுக்கு ஆறுதல் கிடைக்கும் “யெகோவாவின் * கண்கள் நீதிமான்களைக் கவனிக்கின்றன. அவருடைய காதுகள் அவர்களுடைய கூக்குரலைக் கேட்கின்றன” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 34:15) நம் மனதில் இருப்பதையெல்லாம் கடவுளிடம் சொல்வது வெறுமனே மனக் காயத்துக்கு மருந்தாக இருக்கிறது என்றோ, யோசனைகளைக் கட்டுப்படுத்த மட்டும் உதவுகிறது என்றோ சொல்ல முடியாது. நம்மைப் படைத்த கடவுளோடு நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ளவும் அது உதவுகிறது. அவர் தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி நமக்கு ஆறுதல் தருவார். சந்தோஷமான எதிர்காலம் காத்திருக்கிறது இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: சீக்கிரத்தில், இறந்தவர்கள் மறுபடியும் இந்தப் பூமியில் உயிரோடு வருவார்கள்! அப்படிப்பட்ட ஒரு காலத்தைப் பற்றி பைபிள் அடிக்கடி சொல்கிறது. அப்போது பூமியில் நிலைமைகள் எப்படி இருக்கும் என்றுகூட அது சொல்கிறது: “[நம்முடைய] கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.”​—வெளிப்படுத்துதல் 21:3, 4. கடவுளாகிய யெகோவாமேல் நம்பிக்கை வைக்கிறவர்கள், இறந்துபோன தங்களுடைய அன்பானவர்களை மறுபடியும் பார்க்க முடியும் என்று நம்புகிறார்கள். www.jw.org