

யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம்பிள்ளை மனோன்மணி அவர்கள் 13-12-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பொன்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து சோதிமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வேலாயுதம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சர்வாம்பாள்(ஆசிரியர் யா/ பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம்), ஸ்ரீகாந்தன்(லண்டன்), பரந்தாமன்(சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் சங்கானை), ஐங்கரன்(லண்டன்), வடிவாம்பாள்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறீகணநாதன்(ஓய்வுபெற்ற லங்கா சீமெந்து நிறுவன லிகிதர்), கிஷாந்தி(லண்டன்), மகிழினி, ஜெகசோதி(லண்டன்), ராஜகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சஞ்சீவன்(கொழும்பு), வைஷ்ணவி தினேஸ்(சிங்கப்பூர்), பானுகா(லண்டன்), ஹிமாஜினி கஜீபன்(லண்டன்), தர்மிகா(மாணவி யா/வட்டு இந்துக் கல்லூரி), நிரோஸ்(லண்டன்), சைலிஜா(லண்டன்), ஜலுஷா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சஸ்வின் அவர்களின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான பரமசிவம், அருளம்பலம், சிவபாக்கியம், கார்த்திகேசு, கணபதிப்பிள்ளை, செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, வள்ளியம்மை, இராஜேஸ்வரி, செல்வராஜா, கிருஸ்ணராஜா, ஆனந்தராஜா, குலசேகரம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:-
வீடு- குடும்பத்தினர்: +94772834558