1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலுப்பிள்ளை தங்கவடிவேல்
முன்னாள் வேல்மோட்டோஸ் உரிமையாளர்- ஸ்ரான்லிறோட், யாழ்ப்பாணம்
வயது 88

அமரர் வேலுப்பிள்ளை தங்கவடிவேல்
1935 -
2024
ஏழாலை மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை தங்கவடிவேல் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 04-10-2025
உங்கள் நினைவலைகள் ஓயாது வந்து
எம் மனக்கரையை தழுவும் போதெல்லாம்
விழி நனைந்து தவிக்கின்றோம்
மீளாத்துயிலில் நீங்களும்
ஆறாத்துயரில் நாமும் வாழ
படைத்தவன் எழுதிய கணக்கு!
நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்து தான் போகின்றோம்
அப்பா நீங்கள் இறையடி எய்து
ஓர் ஆண்டு ஆனது....நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்?
காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்