சிவபாலனே! அப்பு என்னும் நட்பு வட்டம் கொண்டவனே! செப்பும் உன் கதைகள் தேனாக கேட்க்கும் எங்கள் காதில்! கரும்பாட்டம் உன் கதைகள் கேட்க! எறும்பாட்டம் உன்னை சுற்றி நாங்கள்! குறும்பான எங்கள் செயல்கள், இன்று நினைத்தாலும் விருந்தாகி எங்கள் நினைவில்! நண்பனே! நண்பர்கள் கழகம் (Friends Club) அமைத்தாய்! இன்பமாக இருந்தோம் அதில் இணைந்து துன்பங்கள் பல துறந்து! கழகத்தில்! கலைமகள் விழா முதல் கொண்டு கர்த்தர் பிறப்பு வரை கொண்டாடினோம் மகிழ்வாக! கால் பந்தாட்டம் முதல் கரப்பந்தாட்டம் வரை ஆடினோம் உடல் வலுவாக! நாம்! பரீட்சை படிப்பதற்கு பாசத்துடன் உன் வீட்டில் இடம் கொடுத்தாய் பாலுடன் தேன் கலந்து தந்தாய் அவ்வப்போது விருந்துண்டு மகிழ்ந்தோம் உன் வீட்டில் நெருப்பு உண்ட நிலையாக எம் நெஞ்சம் இன்று நேசனே! ஈசனுக்கு இனிக்க! இனிக்க! கதை சொல்வாய் என்றா? சிவநேசன் உன்னை சிவாலயம் அழைத்தான் அங்கு. நண்பனே! கைலை நாதனுக்கு கதைகள் சொல்லி மகிழ்ந்திரு இங்கு கவலையுடன் நாங்கள். மறவாத மரியநேசன், Canada
May his soul rest in peace, Rajakumar