யாழ். பன்னாலை நாவலடியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி மத்தியை வசிப்பிடமாகவும், பன்னாலையை(அம்பனை) தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் உயிருக்குள் உயிரான தெய்வமே!
என் உலகமே நீ தான் என்றிருந்தேன்
ஏன் இப்படி நடந்தது?
என் நினைவிலும் மறக்கமுடியவில்லை!
அம்மா! உன் இனிமையான நினைவுகளை
நினைக்கும் போது நிலைகுலையச் செய்யுதம்மா!
நேற்று போல் இருக்கிறது உன் நெஞ்சகலா அந்நினைவு!
நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை நினைக்கையிலே
ஏன் என்னை மறந்தாய் அம்மா!
எங்கும் நிழலாய் பின்தொடர்ந்தாய்- இப்போது
பாதிவழி விட்டுவிட்டு பரலோகம் சென்றதுமேன்?
அன்பிற்கே சாவு என்றால் அகிலம் என்னாவது?
என்னுயிரே வந்துவிடு ஏங்கி நான் தவிக்கின்றேன்
எங்கள் ஆருயிர் அம்மாவே!
எங்களிடம் திரும்பவும் நீ வந்துவிடு!
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார்
வருவதில்லை மானிடர் இயல்பு இதுதான் என்று
மறக்கவும் முடியவில்லை அம்மா!
அம்மா நீங்கள் எம் தெய்வம்!
உங்கள் திருப்பாதத்திற்கு எங்கள் அகம் தாழ்த்தி
கண்ணீர் பூக்களை காணிக்கை ஆக்குகின்றோம்
வையத்து வாழ்க்கை அது பொய்யம்மா!
நீங்கள் எம்மிடம் வந்தால் அது மெய்யம்மா!
விண்ணில் நீ கலந்த நாள் முதலாய்
எங்கள் விழி உறங்க மறுக்குதம்மா!
கண்ணில் நித்தம் ஈரம் கணப்பொழுதும் உன்சோகம்
என் அன்பு அம்மாவே..
உங்கள் பிரிவால் வாடும் கணவர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டபிள்ளைகள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...