Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 06 FEB 1940
இறப்பு 19 APR 2026
அமரர் வேலுப்பிள்ளை துரைராசா (அருமை)
முன்னாள் தான் தோன்றி அம்மன் கோயில் தலைவர்
வயது 86
அமரர் வேலுப்பிள்ளை துரைராசா 1940 - 2026 நாரந்தனை வடக்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நாரந்தனை வடக்கு ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை துரைராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
நாட்கள் 31 ஆன போதும்
உங்களை நாங்கள் இழந்த துயரை
 ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா

தன்னை உருக்கி பிறருக்கு ஒளி
கொடுக்கும் மெழுகுவர்த்தி போல்
 
உங்களை உருக்கி எம்மை
 காத்து வந்த தெய்வமே...

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர் 
 பிரிந்த காலமெல்லாம்
 எம் கண்களில் நீர்க்கோலம்
இன்று நம் கண்ணீர் நிறைந்த கண்கள்

உங்களை தேட எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய  
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 08-05-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 07.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 11.05.2026 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறவுள்ளன. அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து, அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute