1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் வேலுப்பிள்ளை சிவகுமாரன்
1950 -
2023
துன்னாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். துன்னாலை வடக்கு கரவெட்டி நொத்தாரிசு வளவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை சிவகுமாரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான அப்பாவே!
உங்கள் அன்புச் சிறைக்குள் அடைபட்டு
இன்புற்று இருந்த இனிய வசந்த காலம்
எங்கள் இதயத்துள் இன்பவலியாய்
எமக்குள்ளே ஆன்மாவை அச்சுறுத்த
ஏன்? எங்கே? பிரிந்து போனீர்கள்!
நீ இல்லாத நாமும்
நிலா இல்லாத வானம்!
நம் வீட்டு சூரியன் அழுகிறது
துடைக்க நினைக்கும் விரல்கள் எரிகிறது
தன்னை உருக்கி பிறருக்கு
ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல் உம்மை
உருக்கி எம்மை காத்து வந்த தெய்வமே...
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
சகோதரர்கள், பேரப்பிள்ளைகள்
உமை நினைத்து வாடிடவே
போனது எங்கேயோ ?
உறவுகளைப் பிரிந்து!
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Heartfelt condolences. Sri Anna & Vasantha