யாழ். சாவகச்சேரி டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திரு உருவே ஆசை அப்பாவே
ஆண்டுகள் பத்து ஆனதப்பா நீ மறைந்து
சீரோடும் சிறப்போடும் தாம் வாழ
நீங்கள் சிந்திய வியர்வை துளிகள்
வீண் போகவில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை- என்ற
தாரக மாந்திரத்தை எம் சிந்தையில் நிலை நிறுத்தினீர்
தரணி போற்ற வாழ்கின்றோம் உன் தர்மம் காத்திட்டோம்
தாள் பணிந்து சிரம் தாழ்த்தி நிற்கின்றோம் உம் நினைவாக
மருமக்களை மக்களாவே கண்டீர்- மாமா
அன்பை அள்ளி தந்தீர் மனம் மகிழ்ந்தீர்
உங்கள் விருப்பம் போலும் சிறப்புடன் வாழ்கின்றோம்
அன்பே சிவம் என்றிடுவோம் ஆன்மா நற் பேற்றுக்காய்
பேரப்பிள்ளைகள் நாம் திளைத்திட்டோம்- உம் நினைவில்
பேர் விளங்கிட கல்வியில் மிளிர்ந்திட்டோம் - உம் ஆசியுடன்
பேதமின்றி அணைத்தீர் அன்பால்- மறவோம்
பேரின்ப வாழ்வு வாழ்வீர் இரண்டரக்கலந்திடுவீர்
வாழ்வில் தூலம் மறைந்தாலும் உம் புகழ் மறையாது
வீசுகின்ற காற்று உள்ளவரை உம் நினைவு நிலைக்கும்
விழும் மழைதுளி உள்ளவரை உம்மை மறவோம்
வீணாகவில்லை சிந்திய வியர்வை துளிகள் உர மானதே
சாந்தி! சாந்தி! சாந்தி