யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் 22-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லீலாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
யசோதரா(ஆசிரியை, யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி), காலஞ்சென்ற சசீந்திரன், பாமா(ஆசிரியை, யா/கல்வியங்காடு இ.த.க பாடசாலை), குமுதாஞ்சலி(நோர்வே), உதயவிக்னேஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பரமலிங்கம்(ஓய்வுநிலை தபாலதிபர்- கனடா), பாக்கியலட்சுமி(பிரான்ஸ்), காந்திமதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவகுமார், காலஞ்சென்ற கண்ணதாசன்(ஆசிரியர்), சிவகுமாரன், வதனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புனிதவதி(ஓய்வுநிலை ஆசிரியை), காலஞ்சென்றவர்களான குலசேகரம் பிள்ளை, சண்முகநாதன், கனகம்மா, கனகலிங்கம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரவு(விதானையார்), கமலாம்பிகை மற்றும் ஞானாம்பிகை ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
வைஷ்ணவி(2018 Bio மாணவி, யா/வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலை), சேயோன், துர்க்கா, விதுரன், லக்ஷயன், தர்சனா, ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வேலணை 5 இல், ஒரு குறிப்பிட்ட காலம் எம் அயலவராக வாழ்ந்த, தம் தம்பி போஸ்ட்மாஸ்ரர் பரமலிங்கம் அவர்களை இரண்டரை வருடங்களுக்குமுன் புதிய உலகிற்கு வழியனுப்பி வைத்தபின், அதே உலகிற்கு அண்ணன் சண்முகநாதன்...