யாழ் வடமராட்சி செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும் கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை இராசம்மா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்தாம் ஆண்டு நினைவு தினம்
எங்கள் குடும்பத்தியாகத்தின்
மறு வடிவம் அம்மா
உங்கள் அன்பை என்றென்றும்
மறக்க முடியவில்லை அம்மா
10 ஆண்டுகள் ஆனாலும்,
1000 ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவுகள் என்றென்றும்
நம்முள் நிற்கும் அம்மா
பாசத்தின் உறைவிடம் நீங்கள் அம்மா
பண்பின் புகழிடம் நீங்கள் அம்மா
விருந்தோம்பலில் முதலிடம்
நீங்கள் அம்மா
விரும்பி அரவணைப்பதில்
முன்னிடம் நீங்கள் அம்மா
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உங்கள் அன்பை மட்டும் தேட வைத்தீர்கள் அம்மா
உங்கள் அன்பிற்காய் ஏங்கி நிற்கின்றோம் அம்மா
நீங்கள் எங்களை அன்று கருவில் சுமந்தீர்கள் - இன்று
உங்களை நாம் நெஞ்சில் சுமக்கிறோம் அம்மா
எத்தனை பிறவிகள் எடுத்தாலும் உங்களுக்குப்
பிள்ளைகளாய் பிறக்க இறைவனை
வேண்டி நிற்கின்றோம் அம்மா...
பேரப்பிள்ளைகளுடன் அன்புடன் இருந்தீர்களே அம்மா....
அந்தக் காலங்களை அவர்கள் இன்னும் மறக்கவில்லை....
இன்றும் கதைகதையாக கூறுவார்கள் அம்மா..
உங்களின் மறைவால் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்,
உற்றார், உறவினர் என அனைவரும்
துயருற்று நிற்கின்றோம்.
உங்கள் ஆத்மாவின் சாந்திக்காக
இறைவனை வேண்டி நிற்கும் உங்கள்,
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!