யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கனடா Scarborough, ஐக்கிய அமெரிக்கா Boston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜதுரை வேலுப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 02/02/2026
அன்பின் திருவுருவாய்
அகத்தின் ஒளிவிளக்கே -அப்பா!
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஓராண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா!
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ!
அப்பா எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!
எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-அப்பா
மாறாது ஒருபோதும் உம் கொள்கை
நம் வாழ்வில் என்றும் மறையாது
உங்கள் நினைவு
எம் மனதை விட்டு அப்பா!!!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
ஆழ்ந்த அனுதாபங்கள். சித்தப்பாவின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம் ஓம்சாந்தி