யாழ். மயிலிட்டி கொத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்களின் நன்றி நவிலல்.
எம் குலத்தின் விருட்சமாகி
அன்புக்கு இலக்கணமாய்
பாசத்தின் உறைவிடமாய்
எம்முடன் வாழ்ந்து
எம்மை எல்லாம் ஆறாத்துயரில்
ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்ட எமது தெய்வமே!
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திகின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
சிவபாக்காயம் அனரி குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்