5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வேலுப்பிள்ளை கணபதிப்பிள்ளை
1946 -
2021
கண்டாவளை, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், வரணியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தந்தையே!
ஆண்டு 5 மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமய்யா?
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
என்றும் உயிர் வாழும் எங்கள்
இதயமதில் இறுதி வரை நிலைத்து நிற்கும்
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
பிள்ளைகள்...
தகவல்:
குடும்பத்தினர்