யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை அன்பழகன் அவர்களின் 10 ஆண்டு நினைவஞ்சலி.
எமக்கொரு ஆண்பிள்ளை நீ என்று
அன்பாக வளர்ந்து அன்பழகன் எனும்
செல்லப் பெயரை உனக்கு வைத்து
அன்பாக அழைத்தோமே!
இன்று உன் நாமத்தை தொலைத்து விட்டு
தேடுகின்றோம் நீ போன வழியெங்கும் விழிவைத்து
காணவில்லை நிழலைக் கூட- ஏங்கி
தவித்து இன்று ஆண்டு பத்தாகியது
விடி காலை மலர் தூவி தீபம் ஏற்றி
கண்ணீரால் நீர் தெளித்து- வணங்கின்றோம்
தினம் உனக்கு
நீ அறிவாயோ எம் உள்ளக்குமுறவை
இன்று போல் உள்ளது உன் நிகழ்வு
ஆனால் காலம் கடந்ததோ பெருமளவு
காலமுள்ள வரை உன் நினைவோடு
வாழ்ந்தே கழித்திடுவோம் மிகுதி நாளை
என்றும் உன் நினைவோடு வாழும்
சூரியன் வந்தான் பகல் மலர்ந்தது
சந்திரன் வந்தான் இரவு மலர்ந்தது
அதே போல் சகோதரா எங்கள்
வாழ்விலும் சந்திரனாக வந்தாய்
குடும்பம் என்னும் ஆலமரத்தை
தாங்கிட்ட ஒரு விழுதாய் நின்றாய்
எம் சகோதரா
உன் பிரிவால் வாடுகிறோம் இன்று நாம்....
உன் பிரிவால் வாடும் அப்பா, அம்மா, சகோதரங்கள்