யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கு திகிரியைப் பிறப்பிடமாகவும், சவணாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலும்மயிலும் தங்கமுத்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும் அம்மா
உங்கள் பிரிவின் துயரத்தை
எங்களால் ஆற்ற முடியவில்லை
அம்மா எங்கு சென்று விட்டார் !
எப்போது வருவார் !
என்று உங்கள் மிள் வருகையை
தினமும் எதிர்பார்த்து
மகன் லிங்கம் தெருவெல்லாம்
உங்களை தேடி அலைகின்றான்
ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் நீங்கள் எங்களுக்காக
ஏற்றீர்கள் பட்ட கஷ்டங்களிற்கு
முற்றாக பரிகாரம் தேட முன்னார்
எம்மை எல்லாம் விட்டுச் சென்று
விட்டீர்கள் என்று எங்களால்
இன்றும் நம்ப முடியவில்லை
கண்களிலே இன்னமும் ஈரம் காயவில்லை
உள்ளத்திலே இன்னமும் கனதி குறையவில்லை
மனம் ஏங்கி தவிக்கிறது
உங்களை காண்பதற்கு
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களைத் தேடிக்
கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்