அம்மா தூங்குகிறார்.. அவவை எழுப்ப வேண்டாம். அப்படியே தூங்கட்டும்.. . பஞ்சு மெத்தையிலே பட்டாடை போர்வையிலே பிஞ்சு குழந்தை போல பேசாமல் தூங்குகிறா அவவை எழுப்ப வேண்டாம் அப்படியே தூங்கட்டும்.. பருவ வயதுதனில் -வேல் முருகர் காதலாலே உருவம் தான் மெலிந்து உறவுகளையும் பிரிந்து அப்பா அருகில் செல்ல அமைதியாய் தூங்குகிறா அவவை எழுப்ப வேண்டாம் அப்படியே தூங்கட்டும்.. பெண்ணாய் பெற்றதானால் பெரும் சுமைதான் வருமோ.? பின்னாளில், உண்ணா நிலை வருமோ ஊருக்குலைந்து போய் விடுமோ எண்ணாது , சிங்கப்பெண்ணாய் நின்ற சிறப்புடனே தூங்கிறார் அவாவை எழுப்பவேண்டாம் அப்படியே தூங்கட்டும்.. சாதி, சமய பாசமின்றி நாதியின்றி வந்தவர்க்கு வாரிக்கொடுத்து கைகள் அசதியிலே தூங்கிக்கிறா அம்மாவை எழுப்ப வேண்டாம் அப்படியே தூங்கட்டும்.. வெளிநாட்டில் நூறு பேர் செழிப்பாக வாழுதென்றால் அன்னாளில் எண்ணாமல் கொடுத்த நோட்டும் எழுதாது விட்ட சீட்டும் எத்தனை குடும்பங்களை ஏத்தி விட்ட ஏணி எளிமையாய் தூங்குகிறா அவாவை எழுப்ப வேண்டாம் அப்படியே தூங்கட்டும்...
Always so good, unselfish and kind Few on this earth her equal we find. Honorable and upright in all her ways, Loyal and true to the end of her days. You are not forgotten, dear mother.