

யாழ். நீர்வேலி வடக்கு இராமால் வளவைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மேற்கு மாசிவனை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 06-01-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, இளையகுட்டி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சுப்ரமணியம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மணிமேகலை அவர்களின் அன்புக் கணவரும்,
குளோசினி(சுவிஸ்), கலைச்செல்வி(சுவிஸ்), நவகீதன்(சுவிஸ்), ஜீவகலா(கனடா), சத்தியசீலன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கந்தையா, அன்னப்பிள்ளை, பொன்னையா, இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவயோகநாதன், தற்பேரானந்தம், சிவகரன், எக்ஸ்பா மற்றும் உமாதேவி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
செளமியா, சிந்துஜன், சினோயன், ஹரி, விக்டோரியா, இம்மனுவேல், திவீனா, சிவப்பிரியன், சிவானுஜன், சினோயா, தஸ்மிகன், தஸ்வந்தி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சியாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.