2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தச்சன்தோப்பு கைத்தடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா வேலுப்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இரண்டு ஆண்டுகள்
பிரிவு என்ற வலியை சுமந்து கொண்டு
இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டதப்பா
நித்தமும் மனவேதனையுடன் மனப் புலம்பலுடனும்
தினமும் வாழ்கின்றோம்...
உங்கள் இழப்பு எதற்கும் ஈடு கொடுக்க முடியதப்பா
எங்களை விட்டு எங்கு சென்றீர்கள்
உங்களை நினைத்து அம்மா கண்ணீருடன் தான்
வாழ்ந்து கொண்டு இருக்கிறார்...
நீங்கள் காட்டிய பாதை
எமக்கு கலங்கரை விளக்கம்..!
நீங்கள் உழைத்த வியர்வை
எங்கள் உடம்பில் ஓடும் உதிரம்..!
எத்தனை காலமானாலும்
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவோடு நாமிருப்போம்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
எங்கள் அன்பான மாமா நீங்கள் இறைவனிடம் அமைதியாக உறங்குங்கள் எங்கள் உயிர் இருக்கும் வரை உங்கள் நினைவுகளுடன் வாழ்வோம்.ஓம் சாந்தி 🌹🌹🌹