

யாழ். வரணி இயற்றாலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை கனகரத்தினம் அவர்கள் 07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்ரமணியம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
வினோதன்(சுவீடன்), வினோஜிதா(சுவீடன்), அகிலன்(நோர்வே), சாரங்கன், கீர்த்தனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மயூரன், மனோஜா, நிதர்சிகா, தர்சிகன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிவயோகம்(இலங்கை), புவனேஸ்வரி(ஜேர்மனி), யோகேஸ்வரி(சுவிஸ்), இந்திரன்(இலங்கை), விஜயராணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசேந்திரம்(இலங்கை), இராஜமோகன்(நோர்வே), இராஜகுலேந்திரன்(சுவீடன்), இராஜமனோகரன்(இலங்கை), இராஜபவான்(லண்டன்), இராஜதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அதீஸ், அவீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குடமியன் வரணி என்னும் விலாசத்தில் அமைந்துள்ள குடமியன் இந்து மயானத்தில் ந.ப 12:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.