
யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா Lichfield ஐ தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட வேலாயுதம் கந்தசாமி அவர்கள் 09-01-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லம்மா, வேலாயுதம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சிவசிதம்பரம், பறுவதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவசேனா அவர்களின் பாசமிகு கணவரும்,
சியாமளா, குமுதினி, சிவசிதம்பரம், குருபரன், இளவேந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகமூர்த்தி, காலஞ்சென்ற தேவானந்தன், சிவலோஜினி, கலைவாணி, Dr. வித்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஞானேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,
மாலினி, சுபத்திரா, மாலதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விமலேஸ்வரி, நகுலேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், கனகாம்பிகை ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
தேவராஜன், இளையபத்மநாதன், கதிர்காமத்தம்பி, பாக்கியம், காலஞ்சென்ற செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோகிலோகன், ராஜ்லோகன், கோசலை, அச்சுதன், ஆரணி, அஸ்மிகா, பாலவிநோதன், ஓர்பிதா, Dr. விக்ரோறியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ரயன், ஆர்யா, நைலா, ரபா(RAFA), அலானா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிமிர்ந்த நடை
நேர்கொண்ட பார்வை
முறுவல் பூத்த முகம்
அறிவும், அன்பு, கண்டிப்பும்
ஒரு சேர்ந்த கனவான்
உயரதிகாரி, அமைதிக்காவலர்
ஈழத்து முத்தாம் முல்லையில்
இடரிடையே தொண்டாற்றியவராம்
வேலாயுதமின் நன்மைந்தனாய்
நெல்லை முருகனின் நாமம் கொண்ட
கந்தசாமி, தேவசேனாவை
தன் கைப்பிடித்து
ஈன்றெடுத்த நல்முத்துக்கள்
முருகன் அருளால் உலகையாள
கண்டு களிப்படைந்து
இறையருளால் எல்லாச் செல்வங்களும்
ஒரு சேர நல் வாழ்க்கை வாழ்ந்து
உலகுக்கு வழிகாட்டியாய் இருந்து
விண்ணுலகடைந்த அன்னார் கந்தசாமியின்
ஆன்மா இறைவனடி சேர வணங்குகிறோம்.