
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, லண்டன் Birmingham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலன் பாலேந்திரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமது அன்பிற்குரிய குடும்பத்தலைவனே
அன்பிற்கும், பண்பிற்கும், பாசத்திற்கும்,
நேசத்திலும் எங்களை மகிழ்வித்து
எனது அன்பிற்கினிய கணவனாக
உமது குழந்தைகளுக்கும் ஒளிகாட்டியாக
ஒளி தந்த கலங்கரை விளக்கே
நீங்கள் அணையமாட்டீர்கள்
என்றுதான் நினைத்தோம்..!
ஆனால் இப்படி நீங்கள் எங்களை
ஏமாற்றுவீர்கள் என்று நாங்கள்
கனவிலும் நினைக்கவில்லை
எங்கள் இதயம் முழுவதும்
நீங்கள் தான் நிறைந்துள்ளிர்கள்
ஐந்து ஆண்டுகள் சென்றுவிட்டன
ஆனால் உங்கள் நினைவுகள் எம்மால்
என்றும் மறக்க முடியாது
எங்கள் இதயத்தில் நீங்கள் தான்
என்றும் நிறைந்துள்ளிர்கள்
வாழ்க்கையில் சோதனைகள் வரலாம்
வேதனைகள் வரலாமா - அப்பா
அன்றிலிருந்து இன்று வரை
நாம் வாழ்ந்த வாழ்க்கையில்
எந்தக் குறையும் எங்களுக்கு
வைக்காத மனம் நிறைந்த எங்கள் - அப்பா
உங்களை நாங்கள் எம் வாழ்வில்
தந்தையாய் பெற்ற பின்பு இந்த உலகம்
எங்களுக்கு மகிழ்வாய் இருந்தது
இன்று நாங்கள் திகைத்து திக்கற்று
நிற்கிறோம் - அப்பா
இடியாய் விழுந்த இழப்பின் வலியினைத்
தாங்க முடியாது நாங்கள் துடிக்கின்றோம்
புழுவாய்த் துடிக்கும் எங்கள் மனதினை
தேற்றத் தெரியாது நாங்கள் தவிக்கின்றோம்
தனியாய்ப் புலம்புகின்றோம்!!!
வற்றாத உங்கள் நினைவுடன்
மனம் உருகி கலங்கி நிற்கின்றோம்
உங்கள் ஆன்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்
Ciao Bala, è stato un piacere averti nella nostra vita. Ti ricorderemo sempre per la tua cortesia e gentilezza verso tutti e soprattutto per il tuo coraggio nell'affrontare la vita. Ci mancherai,...