யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி வடக்கை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேலையா சிவபாக்கியம் அவர்கள் 21-08-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தர் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலையா அவர்களின் அன்புத் துணைவியும்,
தயாளினி(சுவிஸ்), சுதர்ஷினி(இத்தாலி), சுபாஷினி(ஆசிரியை- கொட்டாஞ்சேனை புனித அன்னம்மாள் மகா வித்தியாலயம்), யசிந்தன்(கனடா), நிரோஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜேந்திரன்(சுவிஸ்), நகுலேஷ்வரன்(இத்தாலி), மயூரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கோபால், நேசமணி, செல்வன், ராசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரீ முருகன் அவர்களின் பாசமிகு சித்தியும்,
நவமணி அவர்களின் அன்பு மைத்துனியும்,
நந்தீஸ்வரன், நந்தசுரேஸ், நந்தினி, நிஷாந்தினி, நந்தசபேஸ் ஆகியோரின் அன்பு அத்தையும்,
ஜிவிஷனா, ஜினுர்ஷா, அனன்ஷிகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்சாலையில் நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.