வவுனியா ஓமந்தை கொந்தக்காரன்குளத்தைப் பிறப்பிடமாகவும், வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வேகாவனவேல் இந்திராணி அவர்கள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி உடையார் மீனாட்சி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நற்பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் வேகாவனவேல் அவர்களின் பாசமிகு மனைவியும்,
புஸ்பராணி, பவளராணி, சிறீஸ்கந்தராஜா(சிறீ, கனடா), மகாராஜா(ஓய்வுநிலை கிராம சேவையாளர்), மன்மதராஜா, மதிவதனராணி, அல்லிராணி(ஜேர்மனி), செளந்தரராணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
லோகேஸ்வரி(கனடா), விக்கினேஸ்வரி(ஆசிரியை C.C.T.M.S), சிவோதயன்(லண்டன்), கேதீஸ்வரி(கனடா), ராஜேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கண்ணதாசன்(கனடா), தயானந்தராஜா(ஆசிரியர் முஸ்லீம் மகா, வி வவுனியா), கவிதா(லண்டன்), சத்தியதேவன்(கனடா), வரதராசா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிவபாதம், சிவஞானம்(ஓய்வுநிலை அதிபர்), சந்திராதேவி(கனடா), நாகேஸ்வரி, பத்மாவதி, தெய்வேந்திரம்பிள்ளை, இந்திரகுமார்(ஜேர்மனி), ஞானலிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற சோமசேகரம், நாகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,
சாகித்தியா, அச்சயா, வித்தியாசாகரி, சப்திகா, அபிஷேக், அக்ஷன், அதீசன், சஹானா, ஆரபி, துஷாகன், கபிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-02-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் புகையிரதவீதி வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொந்தக்காரன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94773300399